அதில்,‘‘கடந்த 3-ம் தேதி எனது செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஒரு லிங்க் இருந்தது. அதை தொட்ட போது, உள்ளே எனது வங்கி பக்கத்துக்குச் சென்றது. அதில் விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படாமல் இருப்பதாகவும், பதிவு செய்யுமாறும் வலியுறுத்தப்பட்டதால், எனது விவரங்களை பதிவு செய்தேன். பின்னர் ஒருமுறை வரும் ரகசிய குறியீட்டு எண்ணையும் அதில் பதிவு செய்தேன். அதன் பின்னர், சிறிது நேரத்தில் எனது வங்கிக் கணக்கில் இருந்து மூன்று தவணைகளில் ரூ.65 ஆயிரம் தொகை மாயமானது. அப்போது தான் மர்மநபர்கள் வங்கியில் இருந்து அனுப்புவது போல, லிங்க்குடன் கூடிய குறுந்தகவலை அனுப்பி பணத்தை நூதன முறையில் திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியிருந்தார்.
மாவட்ட சைபர் கிரைம் பிரிவு போலீஸார் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். வங்கியில் இருந்து அனுப்புவதாக கூறி, வங்கிக் கணக்கு விவரங்களை கேட்டு வரும் குறுந்தகவல்களை நம்பி, விவரங்களை சமர்ப்பிக்க வேண்டாம் என சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.