Regional02

அனுமதியற்ற மனைகளை வரன்முறை செய்ய கோவையில் வரும் 11-ம் தேதி சிறப்பு முகாம் :

செய்திப்பிரிவு

கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: மாநகரில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்ய, மாநகராட்சியின் ஐந்து மண்டல அலுவலகங்களிலும் வரும் 11-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.

கடந்த 1980 ஜனவரி 1-ம் தேதிக்கு பிறகு, 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்னர் பத்திரப்பதிவு செய்த மனைகளை வரன்முறை செய்து கொள்ளலாம்.கோவை உள்ளுர் திட்டக் குழுமத்தால் எஸ்பிஎஃப் எண் வழங்கப்பட்ட மனைப்பிரிவில் உள்ள அனைத்து தனி மனைகளையும் வரன்முறை கட்டணம் மற்றும் அபிவிருத்தி கட்டணங்களை செலுத்தி வரன்முறை செய்து கொள்ளலாம். வரன்முறை செய்யப்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள இயலும். மாநகராட்சியின் கட்டிட அனுமதி, சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி மற்றும் சுகாதாரவசதி உள்ளிட்ட சேவைகளை பெற முடியும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT