நீலகிரியில் பொறியியல் கல்லூரி அமைச்சர் கா.ராமச்சந்திரன் உறுதி :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம்அரசு விருந்தினர் மாளிகையில் பள்ளிகல்வித் துறை, உயர்கல்வித் துறை மற்றும் போக்குவரத்துத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் வனத்துறை அமைச்சர் கா.ராமச் சந்திரன் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்குப்பின் வனத்துறை அமைச்சர், செய்தியாளர்களிடம் கூறும்போது ‘‘கூடலூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரத்தேவையான நடவடிக்கைமேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலியாகஉள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஏதுவாக கருத்துரை கேட்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் அரசு பொறியியல் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

இக்கூட்டத்தில் ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குநர் ஜெயராமன், மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர் நாசருதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

மேலும்