Regional02

வாகனம் கவிழ்ந்து 4 பேர் காயம் :

செய்திப்பிரிவு

பர்கூர் அருகே கல்பாரம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்ததில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

கிருஷ்ணகிரி பெத்ததாளப்பள்ளியில் இருந்து நேற்று கருங்கற்களை ஏற்றிக் கொண்டு வாணியம்பாடி நோக்கி சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தது. பர்கூர் அடுத்த அத்திமரத்துப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் சென்றபோது சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்தது.

இதில், வாகனத்தில் இருந்த பாஞ்சாலியூர் பிரகாஷ் (28), அருள் (32), சீனி (22), பிரபு (22) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பர்கூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT