Regional02

ஒரே பள்ளியில் 222 பேருக்கு கரோனா பரிசோதனை :

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அருகே சிங்காடிவாக்கம் பள்ளியில் 207 மாணவர்கள் உள்பட 222 பேருக்கு கரோனா பரிசோதனை நேற்று செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் அருகே உள்ள சிங்காவடிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் சரளா என்பவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மருத்துவக் குழுவினர் அந்தப் பள்ளிக்கு விரைந்தனர்.

அவர்கள் பள்ளியில் உள்ள 207 மாணவர்கள், 12 ஆசிரியர்கள், 3 பணியாளர்கள் உட்பட 222 பேருக்கு கரோனா பரிசோதனை செய்தனர். சத்துணவு அமைப்பாளருடன் மாணவர்கள் அதிகம் தொடர்பில் இல்லை.

இதனால் தொடர்ந்து பள்ளி செயல்படுகிறது. மாணவர்களுக்கு தொற்று உறுதியானால் மட்டுமே பள்ளியை தற்காலிகமாக சில நாட்கள் மூடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அருட்செல்வம் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT