விபத்தில் சிக்கியவரின் நகையை பறித்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் :

By செய்திப்பிரிவு

தாம்பரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் இரு தினங்களுக்கு முன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா சென்றுவிட்டு, சொந்த ஊர் திரும்பும்போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் புறவழிச்சாலையில் அரசுப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த 6 பேர் உயிரிழந்தனர். அப்போது உயிரிழந்தவர்களின் உடல்களை சில தனியார் ஆம்புலன்ஸில் ஏற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்ஸில் ஏற்றுவதற்கு முன் சிலர் விபத்தை புகைப்படம் எடுத்துள்ளனர். அந்த புகைப் படத்தில் உயிரிழந்த, ஜெஸி ரபைக்கா என்பவரின் கை மற்றும் கழுத்தில் செயின் மற்றும் கையில் வளையல் அணிந்திருந்தது இடம்பெற்றுள்ளது. ஆனால் அவரது உடல் ஒப்படைக்கப்பட்ட போது, அந்த செயின் வழங்கப்படவில்லை. இதையடுத்து தியாகதுருகம் போலீஸார் ஆம்புலன்ஸ் ரமேஷிடம் விசாரணை நடத்தியதில், அவர் நகைகளை அபகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. போலீஸார் அவரிடமிருந்த செயினை மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

பல உயிர்களை காப்பாற்ற தன் உயிரையும் துச்சமென எண்ணி மனிதாபிமானத்தோடு செயல்படும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கிடையே இக்கட்டான தருணத்தில் கூட சிலர் இறந்த உடல்களின் மீதுள்ள ஆபரணங்களை அபகரிப்பது என்பது வேதனையானது என்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

6 mins ago

இந்தியா

30 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்