Regional02

வணிக வளாகத்தில் தீ விபத்து :

செய்திப்பிரிவு

திருப்பூர் வாலிபாளையம் பிரதான சாலையிலுள்ள வணிக வளாகத்தில் உணவகம், பல்பொருள் அங்காடி, உடற்பயிற்சிக் கூடங்கள், சலூன்கள் உள்ளன. இந்நிலையில், நேற்று காலை முதல் தளத்தில் உள்ள ஒரு சலூன் கடையில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால், உள்ளே இருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அனைத்து ஊழியர்களும் வெளியேறினர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. தீ விரைவாக அணைக்கப்பட்டதால் மற்ற கடைகளுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது.

SCROLL FOR NEXT