Regional02

மது பதுக்கி விற்ற 39 நபர்கள் கைது :

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டத்தில் மது பாட்டில் பதுக்கி விற்ற 39 நபர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச் செல்வன் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், தருமபுரி மாவட்டத்தின் அனைத்து காவல் நிலைய எல்லைப் பகுதிகளிலும் போலீஸார் மதுவிலக்கு சோதனை மேற்கொண்டனர்.

இதில், தருமபுரி டிஎஸ்பி சரக கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற 6 நபர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அதேபோல, அரூர் சரக கட்டுப்பாட்டி 14 நபர்களையும், பென்னாகரம் சரக கட்டுப்பாட்டில் 9 நபர்களையும், பாலக்கோடு சரக கட்டுப்பாட்டில் 10 நபர்களையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT