Regional02

நெய்வேலியில் குண்டர் சட்டத்தில் 2 ரவுடிகள் கைது :

செய்திப்பிரிவு

நெய்வேலி வட்டம்-21 பகுதியைச் சேர்ந்தவர்கள் வீரமணி (40), சுதாகர் (23). வீரமணி மீது கொலை, வழிப்பறி உள்பட 25 வழக்குகளும், சுதாகர் மீது 5 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அண்மையில் வெடிகுண்டு வீசிய வழக்கில் இருவரும் நெய்வேலி தெர்மல் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இருவரின் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் விதமாக குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி சக்திகணேசன் பரிந்துரையின் பேரில், ஆட்சியர் கி.பாலசுப்ரமணியன் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT