ஒட்டன்சத்திரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஜேசிபி வாகனங்களை வழங்கிய அமைச்சர் அர.சக்கரபாணி. 
Regional02

ஒட்டன்சத்திரத்தில் தூர்வாரும் பணிக்கு ஜேசிபி : அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்

செய்திப்பிரிவு

ஒட்டன்சத்திரத்தில் கண்மாய்கள், குளங்கள், கால்வாய்கள் தூர்வாருதல் மற்றும் மரக்கன்று நடும் பணிகளுக்காக இரண்டு புதிய ஜே.சி.பி வாகனங்களை அமைச்சர் அர.சக்கரபாணி வழங்கினார்.

ஒட்டன்சத்திரம் தொகுதியில் மரக்கன்றுகளை நடுவதற்காக குழிகள் தோண்டுவதற்கும், நீர்வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரவும் இரண்டு புதிய ஜேசிபி இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திண்டுக்கல் எம்.பி., ப.வேலுச்சாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் அர.சக்கர பாணி ஜே.சி.பி., இயந்திரங்களை அதிகாரிகளிடம் வழங்கிப் பணியைத் தொடங்கிவைத்தார்.

இதன் மூலம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் கண்மாய்கள், குளங்கள், கால்வாய்கள், வரத்துக் கால்வாய்கள் தூர்வாரப்பட உள்ளன. மேலும், அனைத்துக் கிராமங்களிலும் ஜேசிபி மூலம் தேவையான இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு மரக்கன்றுகள் நடும் பணியை விரைவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் வட்டாட்சியர் முத்துச்சாமி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT