வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் ஆக்ஸீலியம் கல்லூரி அருகே பிரபல மருந்து கடையை ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூட்டிச் சென்றனர். நள்ளிரவில் மருந்துக் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பணப் பெட்டியில் இருந்த ரூ.46 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று காலை கடைக்கு சென்றபோது பூட்டு உடைந்திருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பெட்டியில் இருந்த பணத்தை காணாமல் திடுக்கிட்டனர். இதுகுறித்த தகவலின்பேரில், விருதம்பட்டு காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன் விரைந்து சென்று விசாரணை செய்ததுடன் மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகிறார்.