Regional02

சமோசாவில் பல்லிசிறுவன் மயக்கம் :

செய்திப்பிரிவு

ராமநாதபுரத்தில் பல்லி இருந்த சமோசாவை சாப்பிட்ட சிறுவன் மயக்கம் அடைந்தான்.

கீழக்கரை அருகே மேலத்தில்லையேந்தலைச் சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் வாசுதேவா (7). இரண்டாம் வகுப்பு மாணவன். ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து ஊர் திரும்பும்போது ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் இருந்த பேக்கரியில் நேற்று முன்தினம் சமோசா வாங்கி உள்ளான். வீடு திரும்பிய சிறுவன் சமோசாவுக்குள் அரணை பல்லி இருந்தது தெரியாமல் சாப்பிட்டுள்ளான். சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கீழக்கரை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டான்.

இதுகுறித்து சுகாதாரத் துறை யினர் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT