Regional02

கரோனா தொற்று பரவலை தடுக்க பல்லடத்தில் விழிப்புணர்வு பேரணி :

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில்,பல்லடம் நகராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வுபிரச்சார வாரம் என்ற தலைப்பில் நேற்று பேரணி நடைபெற்றது.

பல்லடம் பேருந்து நிலையத்தில் தொடங்கிய பேரணி, கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, மங்கலம் சாலை, என்.ஜி.ஆர். சாலை வழியாக சென்று மீண்டும் பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பல்லடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.

கரோனா விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பல்லடம் வட்டாட்சியர் தேவராஜ், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், இந்திய மருத்துவ சங்க செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சரவணகுமார், மருத்துவர்கள் சுடர்விழி, பிரசாத் சேவியர் உட்பட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT