Regional02

மனைவியின் கைகளைக் கட்டிப்போட்டு சரமாரி வெட்டு - என்எல்சி பொறியாளர் தற்கொலை :

செய்திப்பிரிவு

நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 12 சரோஜினி நாயுடு சாலையில் வசித்து வந்தவர் உத்தண்டராயர் (51). இவர் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் உள்ள முதலாவது நிலக்கரி சுரங்கத்தில் பொறியாளர். இவரது மனைவி ஜெயசித்ரா (45).இவர்களது 3 மகன்களும் வெளியூரில் உள்ளனர். உத்தண்டராயர் கடந்த சில வருடங்களாக மனநிலை பாதிக்கப்பட்டதால் தொடர்சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று பணிக்குசென்று வீடு திரும்பிய உத்தண்ட ராயர் மனைவி ஜெயசித்ராவிடம் சண்டை போட்டுள்ளார். அப்போதுஜெயசித்ராவை கயிறால் கட்டிபோட்டு அவரது இரண்டு கைகளை யும் வெட்டி போட்டுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் வந்து அவரைமீட்டனர்.

வீட்டின் படுக்கைஅறையில் உத்தண்டராயர் கயிற்றால் தூக் கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் இருந்தது தெரிய வந்தது. ஜெயசித்ரா என்எல்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு முதலுதவி உதவி அளிக்கப்பட்டு வெட்டப் பட்ட கைகளை ஐஸ்பாக்ஸில் வைத்துமேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இது குறித்து தகவலறிந்த நெய்வேலி போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உத்த ண்டராயர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT