Regional02

திமுக பிரமுகர் கல்லால் அடித்து கொலை :

செய்திப்பிரிவு

குன்னூர்: குன்னூரில் திமுக பிரமுகரை கல்லால் அடித்து கொலை செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள மூலக்கடை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ் (68). அப்பகுதி திமுக கிளை செயலாளரான இவர், வீட்டு முன்பு காய்கறி கடை நடத்திவந்தார். இவரது கடைக்கு அருகே, முத்துக்குமார் (61) என்பவரும் கடை வைத்து காய்கறி விற்பனை செய்து வந்தார். வாடிக்கையாளர்களை கவர்வதில் இருவரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு இருவரிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது. அப்போது அருகில் கிடந்த கல்லை எடுத்து நடராஜை, முத்துக்குமார் தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த நடராஜ் மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு, குன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில், நடராஜ் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. கொலை வழக்கு பதிந்து முத்துக்குமாரை மேல் குன்னூர் போலீஸார் தேடி வருகின்றனர்.

உயிரிழந்த நடராஜுக்கு மனைவியும், ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

SCROLL FOR NEXT