அஞ்செட்டி வனச்சரகத்தில் விதைப்பந்துகளை தூவும் பணியை மேற்கொண்ட தன்னார்வலர்களுடன் மாவட்ட வன அலுவலர் பிரபு, மாவட்ட வன பாதுகாவலர் கார்த்திகாயினி , வனச்சரகர் சீதாராமன் மற்றும் வனப்பணியாளர்கள் உள்ளனர். 
Regional02

ஓசூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம் :

செய்திப்பிரிவு

இதுகுறித்து ஓசூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நடப்பு கல்வியாண்டில் இளங்கலை தமிழ், ஆங்கிலம். வணிகவியல், வணிக நிர்வாகவியல், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், வேதியியல், தாவரவியல் மற்றும் புள்ளியியல் ஆகியவற்றில் முதலாமாண்டு சேர்ந்து பயில விரும்பும் மாணவர்கள் www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.இணைய வழியில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள் உரிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் கல்லூரியில் உள்ள மாணவர் சேர்க்கைசேவை மையம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT