Regional02

சேலம் அருகே போக்சோ சட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் கைது :

செய்திப்பிரிவு

சேலம் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் அதிமுக இளைஞர் பாசறை கிளை செயலாளரும், ஊராட்சி வார்டு உறுப்பினருமான வசந்தகுமார் (27) என்பவர் பழகி வந்துள்ளார். மேலும், திருமணம் செய்வதாக கூறி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து, போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT