நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே இரவிபுதூர் சாலையில் இடகரை புலமாட சாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் அந்த பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்பவர் பூசாரியாக உள்ளார். காலையில்கோயிலில் பூஜை செய்வதற்காக அவர் வந்தபோது, கோயில் முன்பிருந்த 3 அடி உயரமுள்ள மாடசுவாமி சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது. கோயில் நிர்வாகிகள் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.