கோவில்பட்டி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் வணங்காமுடி (30). தூத்துக்குடியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். தனது நண்பர் திருப்புவனத்தை சேர்ந்த அய்யனார் மகன் சின்னபாண்டி (29) என்பவருடன், மோட்டார் சைக்கிளில் நேற்று அதிகாலை திருப்புவனத்துக்கு சென்றார்.
எப்போதும்வென்றான் அருகே ஜெகவீரபாண்டியபுரம் விலக்கு பகுதியில் வந்தபோது, பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சின்னப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த வணங்காமுடி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எப்போதும்வென்றான் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.