Regional02

ஹஜ் தலைமை செயலர் அலுவலர் பணிக்கு விண்ணப்பம் :

செய்திப்பிரிவு

இந்திய ஹஜ் தலைமை செயல் அலுவலர் பணிக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார் .

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘‘இந்திய ஹஜ் குழுவின் தலைமை செயல் அலுவலர் பதவிக்கு மாற்றுப்பணி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணியுடன் மேலும் ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு அளிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இந்தப் பணிக்கு ஆங்கிலம், உருது, இந்தி மொழிகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற இந்திய மொழிகள் மற்றும் அரபி மொழியில் போதிய அறிவு பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவத்தை வரும் 30-ம் தேதிக்குள் வேலூர் மாவட்ட ஆட்சியரகம், வேலூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT