Regional02

திருவட்டாறு அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு :

செய்திப்பிரிவு

திருவட்டாறை அடுத்த செங்கோடியைச் சேர்ந்தவர் செல்வன் பாக்கியராஜ். இவரது மனைவி விமலா(72). ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை. கணவர் வெளியே சென்றிருந்த நிலையில், விமலா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் நுழைந்த நபர், விமலா அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துச்சென்றுவிட்டார். திருவட்டாறு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT