Regional02

‘ஊராட்சி மன்றத் தலைவரின் செயல்பாடுகளில் ஒன்றியக் குழுத் தலைவரின் அதிகாரம் கூடாது’ :

செய்திப்பிரிவு

கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்களை கொண்ட புதிய கூட்டமைப்பின் தொடக்கக் கூட்டம் கும்பகோணத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் அதிமுக, திமுக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 36 ஊராட்சி மன்றத் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் புதிய கூட்டமைப்பின் தலைவராக பழவாத்தான் கட்டளை சந்திரசேகரன், செயலாளராக சோழன்மாளிகை ஜெயக்குமார், பொருளாளராக சுந்தரப்பெருமாள்கோவில் சேதுராமன், துணைத் தலைவர்களாக வளையப்பேட்டை ராஜா, கருப்பூர் சுதா, துணைச் செயலாளராக மானம்பாடி தாமரைச்செல்வி, செயற்குழு உறுப்பினர்களாக கோவிலாச்சேரி சுதாகர், கள்ளப்புலியூர் முருகன், அண்ணலக்ரஹாரம் பிரேமாவதி, ராதிகாரமேஷ், வைஜயந்தி, வெற்றிச்செல்வி மற்றும் மரகதம் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், கும்பகோணம் ஊராட்சி மன்றத் தலைவர்களின் செயல்பாடுகளில் ஒன்றியக்குழுத்தலைவர் உள்ளிட்ட யாரும் தலையிடக்கூடாது. ஊராட்சி மன்ற பணி தொடர்பாகவும், ஊராட்சி செயலாளர்களை மாற்றுவது குறித்தும் ஊராட்சி மன்றத் தலைவரிடம் முன்னதாக கலந்தாலோசிக்க வேண்டும்.

ஊராட்சி மன்றத்துக்குட்பட்ட இடங்களில் புதிய மனைப் பிரிவுகள் அமைக்கப்படும்போது, அதற்கான அதிகாரத்தை ஊராட்சி மன்றத் தலைவரிடம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

SCROLL FOR NEXT