தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தூத்துக்குடி மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேர இணையதளம் மூலமாக 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 8-ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அரசு ஒதுக்கீட்டின்படி, ஐடிஐ-க்களில் சேர www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.50. ஆன்லைன் கலந்தாய்வு வாயிலாக சேர்க்கை நடைபெறும்.
அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் சேரும் பயிற்சியாளர்களுக்கு தமிழக அரசால், மாத உதவித்தொகை ரூ. 750, கட்டணமில்லா பேருந்து சலுகை, விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகங்கள், வரைபடக் கருவிகள், சீருடை, காலணி, பயிற்சிக்கு தேவையான நுகர்பொருட்கள் ஆகிய சலுகைகள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, தூத்துக்குடி நிலைய துணை இயக்குநரை 0461 2340133 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.