அரக்கோணம்: அரக்கோணம் எம்ஆர்எப் நிறுவனத்தில் தொழிற் சங்கத்தினர் நடத்திய ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
ஐஎன்டியுசி சங்கத்தின் மாநிலத் தலைவரும் அரக்கோணம் எம்ஆர்எப் தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் கவுரவ தலைவருமான வி.ஆர்.ஜெகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூரில் உள்ள டயர் மற்றும் டியூப் உற்பத்தி செய்யும் எம்ஆர்எப் நிறுவனத்தில் பணியாற்றும் பெரும்பாலான தொழிலாளர்களின் ஆதரவு பெற்ற சங்கமாக ஐஎன்டியுசி உள்ளது. இந்த சங்கம் மற்றும் நிர்வாகத்தினர் இடையே ஊதிய ஒப்பந்தம் கடந்த ஜூன் 30-ம் தேதி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தொழிற்சாலையில் உள்ள தொழிலாளர்களுக்கு மாதம் 10 ஆயிரத்து 500 முதல் 16 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு பெறுவார்கள். கடந்த 4 மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் இங்கு பணியாற்றும் 1,540 தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். இந்த ஒப்பந்தம் நிறைவேற தொழிற்சங்கத்தின் தலைவர் ரமேஷ், பொதுச்செயலாளர் சுரேஷ் ஆகியோர் செயல்பட்டனர்’’ என தெரிவித்துள்ளார்.