உடுமலை: உடுமலை அடுத்த மடத்துக்குளத்தில் கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வழக்கறிஞர்கள் சிலர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரத்துக்குப்பின் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து வழக்கறிஞர்கள் கூறும்போது ‘‘குமரலிங்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட பார்த்தசாரதி கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இவ்வழக்கில் வழக்கறிஞர் ஒருவரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அவரது பெயரை நீக்க வலியுறுத்தியும், போலீஸாரின் செயலைக் கண்டித்தும் மறியல் போராட்டம் நடைபெற்றது.’’ என்றனர்.