Regional02

டயர் வெடித்து கார் கவிழ்ந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு :

செய்திப்பிரிவு

வேடசந்தூர் அருகே காரின் டயர் வெடித்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் காயமடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ஹரிபிரசாத் (27). இவரது நண்பர் புஞ்சைபுளியம்பட்டியைச் சேர்ந்த இளையநம்பி (25). இவர்கள் திண்டுக்கல் வந்துவிட்டு நேற்று காலை கோபிசெட்டி பாளையத்துக்கு காரில் புறப்பட்டனர்.வேடசந்தூர் அருகே கல்வார்பட்டி கிராமப் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது காரின் டயர் வெடித்தது. இதனால், நிலைகுலைந்து கவிழ்ந்த கார் சாலையோரபாலத்தில் மோதியது. இதில் காரை ஓட்டிவந்த ஹரிபிரசாத் மற்றும் இளையநம்பி ஆகியோர் உயிரிழந்தனர். காயமடைந்த மூவர் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கூம்பூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT