மதுரை புதுதாமரைப்பட்டி சி.எஸ்.ஐ தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களின் குடும்பத்தினருக்கு கரோனா நிவாரணப் பொருட்களை வழங்கினர்.
தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து பள்ளியில் பயிலும் மாணவர்கள் 150 பேரின் குடும்பத்தினருக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை கரோனா நிவாரணமாக வழங்க முடிவு செய்தனர். அதன்படி பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பிரியா ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்லம் முன்னிலை வகித்தார். புதுதாமரைப்பட்டி ஊராட்சித் தலைவர் கே.எஸ்.எம்.ஆனந்தகுமார் நிவாரணப் பொருட்களை வழங்கினார். பள்ளி வளர்ச்சிக்குழு உறுப்பினர் துரை கணேசன், சந்தான கிருஷ்ணன், ராமமூர்த்தி, துரை செழியன், ஜெயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.