கரோனா முன்னெச்சரி க்கை நடவடிக்கையாக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தற்காலிகமாக மூடப்பட்ட புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு நேற்று முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் தினமும் 1,500 முதல் 2,000 பேர் சிகிச்சை பெற வந்து சென்றனர். கடந்த மார்ச், ஏப்ரலில் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்தது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் நோயாளிகள் அதிகமானோர் கூடுவதைத் தவிர்க்க புறநோயாளிகள் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்குப் பதிலாக அந்தந்த பகுதி அரசு மருத்துவமனை, சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துவிட்டது. இரண்டு மாதங்களுக்குப் பின்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் சிகிச்சைப்பிரிவு நேற்று முதல் செயல்படத் தொடங்கியது.
இது குறித்து பலருக்கும் தெரியாததால் நேற்று குறைந்த எண்ணிக்கையிலான நோயாளிகளே வந்திருந்தனர். சமூக இடைவெளியுடன் இவர் களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து வழங்கப்பட்டது.