Regional02

முட்புதரில் பதுக்கிய 1.5 டன் ரேஷன் அரிசி மீட்பு :

செய்திப்பிரிவு

தருமபுரி அடுத்த பழைய தருமபுரி பகுதியில் முட்புதரில் பதுக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் மீட்டனர்.

தருமபுரி அடுத்த பழைய தருமபுரி பகுதியில் முட்புதரில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, தருமபுரி வட்ட வழங்கல் அலுவலர் கோவிந்தராஜ் தலைமையிலான குழுவினர் அப்பகுதியில் நேற்று மாலை சோதனை மேற்கொண்டனர். இதில், பழைய தருமபுரிக்கு செல்லும் சாலையையொட்டிய வீடுகளுக்கு இடையே முட்புதரில் 30 மூட்டைகளில் 1.5 டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

அவற்றை மீட்டு தருமபுரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் அதிகாரிகள் ஒப்படைத்தனர். மேலும், அப்பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி நபர் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT