Regional02

ராமநதி- ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை :

செய்திப்பிரிவு

தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாதன், ராமநதி- ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டு குழுத் தலைவர் ராம உதயசூரியன் ஆகியோர் தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து சிவ பத்மநாதன் கூறும்போது, “ராமநதி- ஜம்புநதி இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கு கடந்த 2015-ம் ஆண்டில் ரூ.42 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

கடந்த ஆட்சியில் வனத்துறையின் அனுமதி பெறுவதற்கு முன்பாகவே பணிகள் தொடங்கப்பட்டு, பின்னர் கிடப்பில் போடப்பட்டது. முறையாக அனுமதி பெற்று விவசாயிகளுடன் கலந்துபேசி, அவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்கி திட்டத்தை தொடங்க வேண்டும். திட்டத்தை செயல்படுத்த திமுக ஆட்சியில் தனிநபர் பேச்சுவார்த்தை குழு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.

அதேபோல வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக பேசி பொதுப்பணித்துறை மூலம் வனத்துறைக்கு ரூ.3 கோடி இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு ஆவன செய்துள்ளது. விவசாயிகளுக்கு இழப்பீடுத் தொகை உடனடியாக வழங்க வேண்டும். சில விவசாயிகளிடம் நிலத்துக்கான சான்றுகள் மூதாதையர் பெயரில் உள்ளது.

வருவாய்த்துறை மூலம் உரிய சான்றிதழ் வழங்கி, அவர்களுடைய இடத்துக்கு முறையாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் கூறியுள்ளோம் என்றார்.

SCROLL FOR NEXT