Regional02

திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை விற்பனைக்கு அனுமதி வழங்கக் கோரி திருச்சியில் பாஜக வர்த்தக அணியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்துக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அங்கு சில்லறை விற்பனையும் மேற்கொள்ள அனுமதி வழங்கக் கோரி பாஜக திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி சார்பில் பாலக்கரையிலுள்ள அரியமங்கலம் கோட்ட அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வர்த்தகப் பிரிவு மாவட்டத் தலைவர் ராம்குமார் தலைமை வகித்தார். இதில் வர்த்தக பிரிவு மாநிலச் செயலாளர் எம்.பி முரளிதரன், மாவட்டச் செயலாளர் சுவேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

SCROLL FOR NEXT