கோவில்பட்டி: மணல் கடத்தலை தடுக்க விளாத்திகுளம் டிஎஸ்பி பிரகாஷ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு வைப்பாற்றில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்றுமுன்தினம் இரவு விளாத்திகுளத்தையடுத்து ஆற்றங்கரை கிராமம் அருகே உள்ள தொப்பம்பட்டி கிராம பகுதியில் தனிப்படையினர் வாகன சோதனை செய்தனர். அப்போது மணல் ஏற்றிக்கொண்டு டிராக்டரில் வந்தவர்கள் போலீஸாரைப் பார்த்ததும், மணலுடன் டிராக்டரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.