தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று 7000 கன அடியாக குறைந்தது.
பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 8000 கன அடி வீதம் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 7000 கன அடியாக நீர்வரத்து பதிவானது. அதேநேரம், கர்நாடகா மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 10 ஆயிரம் கன அடியைக் கடந்திருப்பதால் இன்று அல்லது நாளை ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து சற்றே அதிகரிக்க வாய்ப்புள்ளது.