திருவண்ணாமலை: செங்கம் அருகே கஞ்சா வியாபாரியை காவல்துறையினர் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
தி.மலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்ரிபாளையம் கிராமத்தில் வசிப்பவர் நேரு(25). இவர், செங்கம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருகிறார். இதையறிந்த தி.மலை மாவட்ட தனிப்படை காவல் துறையினர் நேருவை பிடித்து செங்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் செங்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நேருவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.