அவர் கூறியதாவது: கரோனா பாதிப்பால் மதுரை, திருப்பத்தூர் அரசு சித்த மருத்துவப் பிரிவு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற அனைவரும் குணமடைந்து சென்றுள்ளனர். உயிரிழப்பு இல்லை. எனவே, இதுபோன்ற நவீன வசதிகள் கொண்ட தனியார் சித்த மருத்துவமனைகளுக்கு கரோனா சிகிச்சை அளிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். பொதுமக்கள் நம் பாரம்பரிய மருத்துவ முறையை முயற்சித்துப் பார்த்தால், பக்க விளைவுகள் இல்லாத நம் மருத்துவ முறையின் மகத்துவம் தெரியும் என்றார்.
ஓம் மரபுவழி மருத்துவமனை தலைமை மருத்துவர் பி.பிரின்சி (சித்தா), மருத்துவர் செ.வெங்கடகணபதி, மு.சுபாஷினி மற்றும் மருத்துவர் நித்யா ரமேஷ்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். இயக்குநர்கள் ரா.கிரிகணேஷ், ராஜேஷ்குமார் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.