Regional02

மரபு வழியில் தமிழ் மொழியை கற்பித்தல் அவசியம் : நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து

செய்திப்பிரிவு

மரபு வழியில் தமிழ் கற்பித்தல் மிகவும் அவசியம் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.

உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயமோகன் எழுதிய, ‘வானம் சுமக்கும் புத்தகங்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா இணைய வழியில் நடைபெற்றது. இதில் நூலை வெளியிட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது: மரபு வழியில் தமிழ் கற்பித்தல் மிகவும் அவசியம். ஒரு சொல்லின் சரியான பொருளை தெரிந்து கொள்ள வேண்டும். அடுத்து சொற்கள், இலக்கணம், இலக்கியம் படிக்க வேண்டும். இதுதான் மரபு வழியில் தமிழ் கற்பிக்கும் முறையாகும் என்று பேசினார்.

எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் பேசியது: இளைஞர்களில் நூற்றுக்கு 90 பேர் வாசிப்பதும் இல்லை. பெரிதாக யோசிப்பதும் இல்லை. 10 சதவீத இளைஞர்கள் வாசிப்புடன் வளர்ந்து வருகின்றனர் என்றார்.

முன்னதாக கவிஞர் ஆர்த்மார்த்தி வரவேற்றார், வழக்கறிஞர்கள் னிவாச ராகவன், பிரபு ராஜதுரை உள்ளிட் டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT