Regional02

கஞ்சா விற்ற 6 பேர் கைது :

செய்திப்பிரிவு

நாகர்கோவில்: கன்னியாகுமரி முருகன்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் தகராறில் இரு இளைஞர்கள் குத்தி கொலை செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட மோதலே இக்கொலைக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை கைது செய்ய எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவிட்டார்.

குளச்சல் காவல்நிலைய ஆய்வாளர் அருள்பிரகாஷ் தலைமையில் துறைமுகம் பகுதியில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டபோது கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்த கோடிமுனையைச் சேர்ந்த ஜெனிலன்(22), அருளன்(22), சைமன்காலனியை சேர்ந்த சதீஷ்(21) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தக்கலை அருகே மணலியில் கஞ்சா விற்பனை செய்த பெர்பின்தாஸ், மார்த்தாண்டம் குளக்கச்சியைச் சேர்ந்த சுஜித் (30), நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் ரதீஷனு (30) ஆகியோரை போலீஸார் கைது செய்து, தலா ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT