நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையால் அணைகள், குளங்கள் நிரம்பின.
தற்போது மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நீர்மட்டமும் சற்று குறைந்த வண்ணம் உள்ளது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70.92 அடியாக உள்ள நிலையில் அணைக்கு விநாடிக்கு 191 கனஅடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து 290 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.74 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 552 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 519 கனஅடி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. முக்கடல் அணையின் நீர்மட்டம் 24 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 7.42 அடி தண்ணீர் நாகர்கோவில் குடிநீர் தேவைக்காக விநியோகம் செய்யப்படுகிறது.