Regional02

தொழிலாளி கொலை வழக்கில் 5 பேர் கைது :

செய்திப்பிரிவு

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டன் (32). தனியார் தொழிற்சலையில் கூலித் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் வடமாம்பாக்கம் அருகே கடந்த 25-ம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். அரக்கோணம் நகர காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணை யில், கடந்த 2014-ம் ஆண்டு வடமாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரை கோதண்டன் கொலை செய்த வழக்கில் பழிக்குப் பழியாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், சொத்து பிரச்சினை காரணமாக கோதண்டனால் கொலை செய்யப்பட்ட முனுசாமியின் மகன் மனோஜ்குமார் (25) மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பழிக்குப்பழியாக கோதண்டனை கொலை செய்துள்ளனர். இதையடுத்து, மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்களான தணிகைபோளூரைச் சேர்ந்த மகேஷ்குமார் (23), சுனில் (23), மங்கம்மாபேட்டையைச் சேர்ந்த சுப்பிரமணி (23) மற்றும் அரக்கோணம் ஜோதி நகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை காவல் துறையினர் நேற்று கைது செய்தனர்.

SCROLL FOR NEXT