நடுவட்டம் பகுதியில் மரங்கள் வெட்டி கடத்தல் - வனச்சரகர்கள் இருவர் உட்பட நான்கு ஊழியர்கள் சஸ்பெண்ட் :

By செய்திப்பிரிவு

நடுவட்டம் பகுதியில் காட்டு மரங்களை வெட்டுவதற்கு உடந்தையாக இருந்த 2 வனச்சரகர்கள் உட்பட 4 வனத்துறை ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

நீலகிரி வனக்கோட்டம் நடுவட்டம் பகுதியில் உள்ள தனியார்தோட்டத்தில் சில்வர் ஓக் மரங்களை வெட்ட அனுமதி பெற்ற அரசியல் பிரமுகர் ஒருவர், அதே பகுதியில் உள்ள ஏராளமான காட்டு மரங்களை வெட்டிக் கடத்தியுள்ளார். இந்த அத்துமீறல் குறித்து வனத்துறையின் உயரதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் எழுந்தன.

கோவை மண்டல வன பாதுகாவலர் அன்வர்தீன் உத்தரவின் பேரில், வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டதில், வனத்துறை ஊழியர்கள் சிலர் மரக்கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்துமரக்கடத்தலுக்கு உடந்தையாகச் செயல்பட்டு வந்தது உறுதி செய்யபட்டது. இதை அடுத்து கடமை தவறிய வனத்துறையினரை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த முறைகேடு குறித்து வனத்துறையினர் கூறும் போது, ‘கடந்த ஓராண்டாக இப்பகுதியில் முறைகேடாக மரக்கடத்தல் நடந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாகஅண்மையில் எங்களுக்கு புகார்கள்வந்தன. கோவை மண்டல வனப்பாதுகாவலர் அன்வருதின் உத்தரவின் பேரில், ஆய்வு செய்ததில் அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் அதிகளவு சில்வர் ஓக் மரங்களை வெட்டியதும் அருகில் உள்ள காட்டுமரங்களை வெட்டியதும் தெரிய வந்தது.

மரம் வெட்டும் பணி நடைபெற்றதை முறையாகக் கண்காணிக்கத் தவறிய நடுவட்டம் கூடுதல் பொறுப்பு வனச்சரகர்கள் சிவா, குமார், வனவர் தருமசக்தி மற்றும் வனக் காவலர் நர்சீஸ் குட்டன் ஆகிய நான்கு பேரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது. தோட்ட உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்