Regional02

மாவட்டம் விட்டு மாவட்டம் சென்று - மது வாங்கியதாக 24 பேர் மீது வழக்கு :

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் கரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10-ம் தேதி முதல் வரும் 21-ம் தேதி வரையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் 14-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

தாராபுரம் அருகே திண்டுக்கல் மாவட்ட எல்லைப் பகுதி வருவதால்,அங்கு மது வாங்க மதுப் பிரியர்கள் திரண்டனர். இதையடுத்து, திருப்பூர் மாவட்ட எல்லையில் உள்ள தாசநாயக்கன்பட்டி, எரகம்பட்டி பகுதிகளில் உள்ள சோதனைசாவடிகளில் காவல்துறையினர் வாகனச் சோதனையைத் தீவிரப்படுத்தினர். இதில் தாசநாயக்கன்பட்டி சோதனைச்சாவடியில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மதுபானங்களை வாங்கி வந்த 13 இருசக்கர வாகனங்கள், 13 கார்களை தாராபுரம் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக மதுபாட்டில்களை வாங்கி வந்ததாக 24 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT