திருச்சி: அரியலூரில் 67, கரூரில் 123, நாகை, மயிலாடுதுறையில் 256, பெரம்பலூரில் 53, புதுக்கோட்டையில் 81, தஞ்சாவூரில் 541, திருவாரூரில் 170, திருச்சியில் 360 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் 1, கரூர் 5, நாகை, மயிலாடுதுறை 4, பெரம்பலூர், திருவாரூர் தலா 3, புதுக்கோட்டை 6, தஞ்சாவூர் 20, திருச்சி 14 என 56 பேர் கரோனா தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.காரைக்கால் மாவட்டத்தில் நேற்று 77 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.