கரோனா வைரஸ் தொற்றாளர்களுக்காக உதகை, கூடலூரில் சித்த மருத்துவ மையங்கள் :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதகை மற்றும் கூடலூரில் சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. முதல் அலையை விட 2-வது அலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. கடந்த ஓரிரு நாட்களாக பூரண குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

உதகை, கூடலூர், குன்னூர்,கோத்தகிரி அரசு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் என 14 மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா போன்ற இந்திய மருத்துவ முறையில் மாவட்டங்கள் தோறும் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று முதல் கரோனா சிகிச்சைக்காக 2 சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. உதகை அருகே லவ்டேல் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் தயார் நிலையில் இருக்கிறது. அங்கு கரோனா நோயாளிகள் 46 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி சித்த மருத்துவ மையமாக செயல்பட தொடங்கி உள்ளது.

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது: கூடலூரில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ மையத்தில் கரோனா உறுதியான குழந்தைகள், பெண்களுக்கு என தனியாக சிகிச்சை அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த மையத்தில் 100 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். அறிகுறி தென் பட்டவர்கள் சித்த மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். உதகை, கூடலூரில் மொத்தம் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.

அலோபதி டாக்டர்கள் அறிவுரையுடன் இந்திய மருத்துவமுறையான சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு அதற்கான மருந்துகளை முழு பாதுகாப்பு கவச உடை அணிந்த ஊழியர்கள் வழங்கி வருகின்றனர். அதனை பயன்படுத்துவது மற்றும் உட்கொள்ளும் முறை குறித்து விளக்கப்படுகிறது. இதன் மூலம் பூரண குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

க்ரைம்

6 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்