திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் துருகம் காப்புக்காடு மிட்டாளம் வடக்கு பகுதியில் ஆம்பூர் வனத்துறையினர் கடந்த வாரம் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கிருஷ்ணப்பா கானாறு பகுதி யில் சில இடங்களில் மணல் கடத்தப்பட்டு வருவது தெரியவந்தது.
இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், மிட்டாளம் ஊராட்சி குட்டகிந்தூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் (55) என்பவர் மணல் கடத்தியது தெரியவந்தது. அதன்பேரில் வனத்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் மணல் கடத்தியதை ஒப்புக் கொண்டார்.
அதன்பேரில் அவருக்கு வனத்துறையினர் ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுத்தனர்.