புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் வெளி யிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பது:
புதுச்சேரியில் கரோனா தொற்றுதற்போது வேகமாக குறைந்து வருகிறது. ஆக்சிஜன், வெண்டி லேட்டர் படுக்கைகள் உள்ளிட்டவை மக்களுக்கு எந்தவித இடையூறும் இன்றி கிடைத்து வருகிறது.
கருப்பு பூஞ்சை அதிகமாக பரவி வருகிறது. இதற்காக கிருமாம்பாக்கம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, காலாப்பட்டு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி ஆகிய 3 மருத்துவக் கல்லூரிகளில் தலா10 படுக்கைகள் உருவாக்கப் பட்டுள்ளன. மேலும் கருப்பு பூஞ்சை நோய்க்கான பிரத்யேக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவம் பார்க்க காது, மூக்கு, தொண்டை, கண், பல், அறுவை சிகிச்சை, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட அனைத்து மருத்துவர்களுடன் கூடிய மருத்துவ வல்லுநர் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், லைபோசோமல் அம்போடெரிசின் பி என்ற முக்கிய மருந்தை வரவழைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.