அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்க வலியுறுத்தி எட்டயபுரத்தில் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.
பேரிடர் கால நிவாரணமாக மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும். நூறுநாள் திட்டத்தில் வேலை மறுக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, வட்டாட்சியர் ஐயப்பனிடம் விவசாயதொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் கு.ரவீந்திரன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தாலுகா குழு உறுப்பினர்கள் செல்வகுமார், நடராஜன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த சிவா, நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.