மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக அரசின் 8-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கோவில்பட்டியில் பாஜக இளைஞரணி சார்பில் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த 80 ஏழை, எளிய குடும்பங்களுக்கு 9 வகையான மளிகை பொருட்கள் மற்றும் அரிசி பைகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் எம்.பி.காளிதாசன் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் மாரிசெல்வம், வடக்கு மாவட்ட செயலாளர் வேல்ராஜா, முன்னாள் நகர பொதுச்செயலாளர் தினேஷ்குமார், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட பொறுப்பாளர் நம்பிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.