ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு கிராமத்தில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஆம்பூர் வட்டம் மாதனூர் வட்டார மருத்துவ அலுவலர் ராமு தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் சுகாதாரக் குழுவினர் தகுதியுள்ளவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தினர். இதில், பாஜக திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் வாசுதேவன், முன்னாள் மாவட்டத் தலைவர் வெங்கடேசன், அக்கட்சியின் நிர்வாகி குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.