திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என தமிழக அரசு ‘ரெட் அலர்ட்' வழங்கியதை அடுத்து பழநி, கொடைக்கானல் பகுதிகளில் முன்னெச்சரிக் கையாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பழநி, கொடைக்கானல் போன்ற பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளன. அரசின் ‘ரெட் அலர்ட்' எச்சரிக்கையால் கனமழை பாதிப்பைத் தவிர்க்க முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், மாநில பேரிடர் ஆணைய அறிவுரைப்படி இன்று முதல் மே 17 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகில் வசிப் போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும். மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகே செல்லக்கூடாது. நகராட்சி ஏற்பாடு செய்துள்ள தங்கும் முகாமை மக்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என தெரி விக்கப்பட்டது.
பழநி
பழநியில் பேரிடர் மேலாண் மைத் துறை சார்பில் கோட்டாட் சியர் ஆனந்தி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வெள்ளம் ஏற்பட்டால் பாதுகாப்பு, மரங்கள் சாய்ந்தால் அகற்ற செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago