Regional02

மன்னார்குடியில் : 6 கடைகளுக்கு சீல் வைப்பு :

செய்திப்பிரிவு

திருவாரூர் மாவட்டம் மன் னார்குடியில் ஊரடங்கு விதி களை மீறி திறக்கப்பட்ட 2 தனியார் நிதி நிறுவனங்கள் உட்பட 6 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலை யில் விதிகளை மீறி திறக்கப்பட்ட கடைகள் குறித்து நேற்று மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி, டிஎஸ்பி இளஞ் செழியன், வட்டாட்சியர் தெய்வநாயகி ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது, மன்னார்குடி கம்மாளர் தெருவில் இயங்கும் 2 தனியார் நிதி நிறுவனங்கள், ஒரு நகைக்கடை, ஒரு மோட்டார் மெக்கானிக் கடை உட்பட 6 கடைகளை பூட்டி சீல்வைத்தனர். மேலும், ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடிக்காத 20-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர்.

SCROLL FOR NEXT